
மார்ச் 19, நியூயார்க் (Cinema News): அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் டேவிட் ஸ்டீவன் கோஹென் (David Steven Cohen). இவர் கார்டூன் நெட்ஒர்க் (Cartoon Network) தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, கரேஜ் தி கோவர்டி டாக் (Courage the Cowardly Dog) எனப்படும் தொடரின் எழுத்தாளராக நெடுங்காலமாக பணியாற்றி இருக்கிறார். கிளப் காட்ஸ் (Klub Katz), கரேஜின் ஆயிரம் ஆண்டுகள் (1000 Years of Courage), பர்பிடன் ஹெட் ஆப் கோல்ட் (Forbidden Hat of Gold), தி சாண்ட் வெல் ஸ்ட்ரைக் (The Sand Whale Strikes) ஆகிய தொடர்கள் இவரின் எழுத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவிலும் பிரபலம் அடைந்தது. OG Sambavam Lyrical Video: "நாம கரெக்ட்டா இருந்தாலும் உலகம் பேட் ஆக்குது" - ஆதிக், ஜீவி குரலில் மிரட்டல் பாடல்.. குட் பேட் அக்லீயின் ஓஜி சம்பவம்.. லிங்க் இதோ.!
புற்றுநோயால் 58 வயதில் காலமானார்:
அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தர்களின், 30 வது இடத்தையும் டேவிட் தக்கவைத்து இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 21.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்நிலையில், புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த டேவிட், தனது 58 வயதில் இயற்கை எய்தினார். அவரின் மறைவு சக பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 90-2000 ஆண்டுகளில் பலரின் கவனத்தை ஈர்த்த கரேஜ் கார்டூன் தொடர், தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதிக பயம் கொண்ட நாய் தனது உரிமையாளர்களை ஒவ்வொரு பிரச்சனைகளில் இருந்தும் எப்படி பாதுகாக்கிறது என்பதை மையப்படுத்தி காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
கரேஜ் டேவிட்டின் மரணத்தை எண்ணி வருந்துவதாக எக்ஸ் பதிவு:
Thank you for teaching me about courage.
Doing it, even though you’re scared. Especially for love!
“The things I do for love!” - Courage, the cowardly dog. https://t.co/VB4caewHWv pic.twitter.com/8Afuqvcccs
— Kailo ▼🇵🇸🌁 (@kailo_exe) March 17, 2025