OG Sambavam Lyrical Video: "நாம கரெக்ட்டா இருந்தாலும் உலகம் பேட் ஆக்குது" - ஆதிக், ஜீவி குரலில் மிரட்டல் பாடல்.. குட் பேட் அக்லீயின் ஓஜி சம்பவம்.. லிங்க் இதோ.!

ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகவுள்ள குட் பேட் அக்லீ படத்தின் ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தில் கேங்ஸ்டராக அஜித் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது...

OG Sambavam Lyrical Video:
OG Sambavam from Good Bad Ugly (Photo Credit: @RameshLaus X)

மார்ச் 18, சென்னை (Cinema News): ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில்,ஜிவி பிரகாஷ் குமார் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லீ (Good Bad Ugly). தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கி வழங்கிய ஆதிக், தனது பாணியில் தல ரசிகராக நடிகர் அஜித் குமாரை இயக்கி படத்தை வழங்கி இருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 10 ஏப்ரல் 2025 அன்று படம் திரையரங்கில் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என உலகளவில் பல மொழிகளில் படம் வெளியாகிறது. PM Narendra Modi: வரலாறு படைத்த இளையராஜா; பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு, பெருமிதம்.! 

இன்று பாடல் வெளியானது:

இந்நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் ஓஜி சம்பவம் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பாடலுக்கான இசையமைப்பு பணிகளை ஜிவி பிரகாஷ் குமார் மேற்கொண்டுள்ளார். விஷ்ணு இடவன் வரிகளில் பாடல் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரின் குரலில் பாடல் உருவாகி இருக்கிறது. தல ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன், தனது குரலை ஓஜி சம்பவம் பாடலுக்காக கொடுத்துள்ளார். இப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

ஓஜி சம்பவம் லிரிக்கல் வீடியோ:

(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).