Hollywood Actor Died: விமானம் கடலில் விழுந்து நொறுங்கி சோகம்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் உட்பட 4 பேர் மரணம்..!
மகள்களுடன் கரீபியன் தீவுப்பகுதியில் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த ஹாலிவுட் நடிகர், தனது மகளுடன் விபத்தில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 2021ல் மனைவி விவாகரத்து வாங்கிச்சென்றதை தொடர்ந்து, தற்போது நடிகரின் குடும்பமே மரணம் அடைந்துள்ளது.
ஜனவரி 06, ஜெர்மனி (Cinema News): ஜெர்மனி நாட்டினை பூர்வீகமாக கொண்ட, 51 வயதுடைய ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஓலிவர் (Christian Oliver). இவர் கோப்ரா 11 (Cobra 11) என்ற தொலைகாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். கடந்த 2002ம் ஆண்டு முதல் திரைத்துறையில் பணியாற்றி வரும் ஓலிவர், ஸ்பீட் ரேசர் (Speed Racer) படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
தம்பதிகள் விவாகரத்து: கடந்த 2010ம் ஆண்டு கிறிஸ்டியன் ஓலிவர், ஜெசிகா மஸூர் என்ற பெண்ணை கரம்பிடித்தார். தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது அன்பின் அடையாளமாக அன்னிக் (12) மற்றும் மடிதா க்ளெப்சர் (10) என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதனிடையே, கடந்த 2021ம் ஆண்டு தம்பதிகள் கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர்.
தந்தையிடம் மகள்கள்: தம்பதிகளின் பிரிவுக்கு பின்னர் குழந்தைகள் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர். கடந்த 4ம் தேதி உள்ளூர் நேரடி மதியம் 12:10 மணியளவில் தந்தை மற்றும் மகள்கள், அங்குள்ள கரிபியன் தீவுகளில் இருக்கும் செயின்ட் வின்சென்ட் நகரம், பெக்வியா தீவு விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானத்தில் பயணம் செய்துள்ளனர். Ram Bhajan Shared By PM Modi: ராமர் வருகிறார் பாடலை கேட்டு, கண்களில் நீருடன் உணர்ச்சிபொங்கிய பிரதமர் நரேந்திர மோடி..! நெகிழ்ச்சி பதிவு.!
விமான விபத்தில் சோகம்: இவர்கள் பயணித்த விமானம் செயின்ட் லூசியா நகரை அடைய 10 நிமிடங்கள் இடைவெளி இருந்தபோது, திடீரென நடுவானில் விமானம் இயந்திர கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த தந்தை, மகள் என 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானி ராபர்ட் சாச் எனபவரும் விபத்தில் உயிரிழந்தார்.
அதிகாரிகள் விசாரணை: விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் இவர்களின் சடலங்களை மீட்டனர். இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 06, 2024 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

