ஜனவரி 06, புதுடெல்லி (New Delhi): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி, ராம ஜென்மபூமியில் ரூ.1800 கோடி செலவில் பிரம்மாண்டமாக ஸ்ரீ ராமர் கோவில் (Ayodhya Dham Ram Mandir) அமைக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 22ம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவுதல் மற்றும் கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக அயோத்தி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கும்பாவிஷேக பணிகள் தீவிரம்: இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள ஸ்ரீ ராம பக்தர்கள், தொடர்ந்து ராம ஜென்மபூமி கோவிலுக்கு தங்களின் நிதியுதவியை அனுப்பி வருகின்றனர். கும்பாவிஷேகம் நடைபெறும் நாளில் பலரும் நேரில் சென்று கலந்துகொள்ளவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரபலங்களுக்கு அழைப்பு: கோவில் நிர்வாகம் சார்பில் இந்திய அளவில் உள்ள மூத்த மற்றும் முக்கிய அரசியல்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மக்களும் நேரில் சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Train Fire Accident: பயணிகள் இரயிலில் திடீர் தீ விபத்து 5 பேர் உடல் கருகி பலி., பலர் படுகாயம்.. வங்கதேசத்தில் வன்முறையால் சோகம்?.!
மக்களின் பயணத்திற்கும் முன்னேற்பாடுகள்: மக்களின் எளிய பயணத்தை கருத்தில் கொண்டு சர்வதேச அளவிலான விமான நிலையம் சமீபத்தில் அயோத்தியில் திறக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் ராமர் கோவில் அமைந்துள்ளது. அதேபோல, அயோத்தி இரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ராம் வருகிறார் (ராம் ஆயங்கே) பாடல்: கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக, ஸ்ரீ இராம பக்தர்களை வரவேற்கும் பொருட்டு, ஸ்வஸ்தி மெஹுல் வரிகள் மற்றும் குரலில் உருவான ராம் ஆயங்கே (Ram Aayenge) என்ற ராமர் வருகிறார் பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் தொடர்ந்து வரவேற்பு பெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் இப்பாடலை கேட்டார்.
உருகிய பிரதமர் மோடி: இந்த பாடலை கேட்டு மெய்சிலிர்த்துப்போன பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகி ஸ்வஸ்தியை பாராட்டி பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், "ஸ்வஸ்தி ஜியின் பாடலை ஒருமுறை கேட்டாலே, நீண்ட நேரம் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கும். இப்பாடல் கண்களில் கண்ணீரையும், மனதில் உணர்ச்சியையும் நிரப்புகிறது" என தெரிவித்துள்ளார்.
ராம் வருகிறார் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்: