ஆகஸ்ட் 27, சென்னை (Cinema News): உலகையே வாட்டிவதைத்த கொரோனா பரவலின்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் பிரபலமாகினர். அந்த வகையில், விஜே சித்துவின் வீடியோ ஒன்றில் தோன்றி, தமிழக அளவில் பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ் (Bijili Ramesh). இவர் பொன்மகள் வந்தால், நட்பே துணை, ஆடை, கோமாளி உட்பட பல படங்களில் சிறிய அளவிலான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சின்னத்திரை நடிகராகவும் வலம்வந்துகொண்டு இருந்தார். Hema Committee: நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை பாலியல் புகார்.. ரியாஸ் கான் கூறுவது என்ன?.!
ரஜினி ரசிகர் காலமானார்:
இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலமடைந்த, திரைப்பட துணை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார். தீவிர ரஜினி ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பிஜிலி, போதிய படவாய்ப்பு இன்மை காரணமாக குடும்பத்தில் வறுமை ஏற்பட்டுள்ளது. மேலும், மதுப்பழக்கம் காரணமாக கல்லீரல் சார்ந்த நோயாலும் அவதிப்பட்டு வந்தார். இதனால் ரமேஷின் நிலையை உணர்ந்த சில நடிகர்கள், தங்களால் இயன்ற உதவியை செய்து வந்தனர். அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் செய்தனர். சமீபத்தில் அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கும் மதுபழக்கத்தை கைவிடுங்கள் என பேட்டியளித்து இருந்தார். தற்போது அவர் இன்று அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.
சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட், ஸ்டிக்கராக வலம்வந்த பிஜிலி:
#BijiliRamesh God gave him a chance to turn his life around,but after achieving fame, he continued to drink alcohol, even during movie and television show shoots. His life serves as a lesson to many 😟avoid alcohol and live a healthy life. #SoberLife #NoAlcohol #LiveHealth #RIP https://t.co/Z6EeiwjZhb pic.twitter.com/aWxBN9RcCB
— An angry commoner (@AnCommoner) August 26, 2024
குடியால் பறிபோன வாழ்க்கை:
#BijiliRamesh 🙏 RIP 💔
His old video 🙏 please do not get addicted to drinking alcohol 🙏
Drink responsibly if possible quit 🙏
— Tonystark🤺 (@Tonystark2409) August 26, 2024