Riyaz Khan (Photo Credit: @Instagram)

ஆகஸ்ட் 26, திருவனந்தபுரம் (Kerala News): கேரளாவில் சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான பிரச்சனைகள் குறித்து விசாரிக்கக் கேரள அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் (Hema Committee) அமைத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை (Rape) செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் இதுபோல பல சம்பவங்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்த விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

ஹேமா கமிட்டி: இது தொடர்பான விசாரணை நடத்திய அந்தக் குழு கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு வெளியிட்டது. அதில் மலையாள திரையுலகில் வாய்ப்புக்காக பெண் கலைஞர்கள் அட்ஜஸ்ட்மென்ட் என பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. Amy Jackson and Ed Westwick Marriage: எமி ஜாக்சனின் 2வது கல்யாணம்.. பிரித்தானியா நடிகரை கரம்பிடித்த எமி..!

ரியாஸ் கான் மீது புகார்: இந்நிலையில் ரேவதி சம்பத் (Revathy Sampath) தற்போது தமிழ் நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் கூறி இருக்கிறார். அவர் தன்னை பாலியல் ரீதியாக அணுகினார் எனவும் போனில் மிகவும் தப்பு தப்பாக பேசினார் என்றும் என்னுடன் உடலுறவுக்கு சம்மதிக்கும் உனது தோழிகள் யாராவது இருந்தால் சொல்லு என்றும் ரியாஸ் கான் தன்னிடம் கேட்டதாக ரேவதி சம்பத் கூறி இருக்கிறார்.

ரியாஸ்கான் மறுப்பு: இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் ரியாஸ்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். பேட்டி அளித்த நடிகை யார் என்றே தெரியாது; என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. மேலும், சட்டப்படியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயார் என்றும் நடிகர் ரியாஸ்கான் (Riyaz Khan) பதிவிட்டுள்ளார்.