Bobby Simha: நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் செய்த பயங்கரம்.. 3 பேர் காயம்..!
குடிபோதையில் வாகனத்தை இயக்கி 6 வாகனங்களை சேதப்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 19, கிண்டி (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் பாபி சிம்ஹா. பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா, உறுமீன், பெங்களூர் நாட்கள், கோ 2, இறைவி, கவலை வேண்டாம், பாம்பு சட்டை, சாமி ஸ்கொயர், பேட்ட, இந்தியன் 2, சலார் ஆகிய படங்களில் நடித்து மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜிகர்தண்டா படத்தில் இவர் நடித்த அசால்ட் சேது கதாபாத்திரம் இன்று வரை வேறெந்த படத்திலும் ஈடு கொடுக்காத அளவு தரத்துடன் இருந்தது. சமீபகாலமாக சில சர்ச்சையிலும் சிக்கி வந்தார். JInguchaa Lyrical Video: கமல் ஹாசனின் ஜிங்குச்சா.. தக் லைப் படத்தின் பாடல் வெளியீடு.!

பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் கைது (Bobby Simha Car Driver Arrested):
தற்போது சென்னையில் குடும்பத்துடன் இருக்கும் பாபி சிம்ஹாவிடம் கார் ஓட்டுநராக புஷ்பராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இதனிடையே, புஷ்பராஜ் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் 6 கார்கள் சேதமடைந்தன. 3 பேர் காயம் அடைந்தனர். இதனால் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கிண்டி காவல்துறையினர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் புஷ்பராஜை கைது செய்தனர்.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

