Ilayaraaja & PM Narendra Modi (Photo Credit: @narendramodi X)

மார்ச் 18, புதுடெல்லி (New Delhi): தமிழ்த் திரையுலகின் இசைஞானி இளையராஜா (Isaignani Ilayaraaja), மார்ச் 10, 2025 அன்று, லண்டனில் உள்ள டால்பி அப்பலோ திரையரங்கில் சிம்பொனி (Ilayaraaja Symphony) இசைக்கச்சேரி நிகழ்ச்சி இருந்தார். இந்தியாவின் குடிமகனாக, தமிழராக பல படங்களுக்கு இசையில் வாழ்க்கை கொடுத்த இளையராஜா, சிம்பொனி இசைக்கச்சேரி நிகழ்த்தியது உலகளவில் கவனிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்திய இசைக்கலைஞர்களளாலும் கொண்டாடப்பட்டது. சிம்பொனிக்கு பின்னர் தாயகம் திரும்பிய இளையராஜாவுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பும் அளிக்கப்பட்டது. முதல்வரும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து, இன்று இளையராஜா இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) நேரில் சென்று சந்தித்தார். OG Sambavam Song Promo Tamil: ஜிவி, ஆதிக் பின்னணி குரலில் அட்டகாசமாக உருவான ஓஜி சம்பவம்.. குட் பேட் அக்லீ படத்தின் பாடல் ப்ரோமோ இதோ.! 

இசை உலகில் மிகப்பெரிய சாதனை:

இந்த விஷயம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைப்பதிவில், "நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது" என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு:

பிரதமருடன் சந்திப்பு தொடர்பாக இளையராஜா வலைப்பதிவு:

இளையராஜாவின் குரலில் சிம்பொனி கிலிம்ப்ஸ்: