Ajith Kumar Statement: அப்பாவின் இறுதிச்சடங்கை குடும்ப நிகழ்வாக இருக்க ஒத்துழையுங்கள் - நடிகர் அஜித் குமார் & சகோதரர்கள் வேண்டுகோள்.!
தந்தையின் மறைவால் குடும்பமே சோகத்தில் இருக்கிறது. எங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் உங்களின் ஏக்கத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது தனிப்பட்ட குடும்ப இறுதி சடங்காக இருக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 23, சென்னை (Tamilnadu News): தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருந்த அஜித் குமாரின் (Actor Ajith Kumar) தந்தை சுப்பிரமணியம் (Subramaniam) என்ற பி.எஸ் மணி (வயது 82), இன்று அதிகாலை 04:30 மணியளவில் இயற்கை எய்தினார். இன்று மாலை அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் மற்றும் அவரின் சகோதரர்கள், தங்களது தந்தையின் மரணம் தொடர்பாக (Ajith Kumar Statement) அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர். இதுகுறித்த அறிக்கையில், "எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி (82 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். Ajay Bangla Corona: இந்தியா வந்த அஜய் பங்களாவுக்கு கொரோனா உறுதி.. டெல்லி விமான நிலைய சோதனையில் உறுதி.!
எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.
தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.
எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்டுறோம். அனுப் குமார், அஜீத் குமார், அனில்குமார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Mar 24, 2023 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

