மார்ச் 23, புதுடெல்லி (Delhi News): இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் (Indian American) குடியேறிய அஜய் பங்களா (Ajay Bangla), உலக வங்கியின் தலைவராக (World Bank) பொறுப்பேற்க அமெரிக்கா (America) சார்பில் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவுக்கு (India) மார்ச் மாதம் 23ம் தேதி மற்றும் 24ம் தேதி வந்து செல்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல, ஆப்ரிக்கா, ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. Ajith Kumar Father: நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்.!
இந்த நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த அஜய் பங்களா, அமெரிக்காவில் இருந்து புறப்படுகையில் கொரோனா (Corona Test Positive) பரிசோதனை செய்தபோது, அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. நேற்று டெல்லி விமான நிலையம் வருகைதந்த அஜய் பங்களாவுக்கு துரித கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை உறுதி செய்த இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் (US Embassy India), அஜய் பங்களாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் தற்போது வரை எந்த இந்திய அதிகாரியையும் சந்திக்கவில்லை. அவரை மருத்துவ குழு கண்காணித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
#UPDATE | The United States nominee for World Bank President Ajay Banga tested Covid positive upon arrival in Delhi. Banga has conducted multiple tests for Covid during his tour and tested negative before departing for India: Spokesperson, US Embassy in New Delhi
(File pic) https://t.co/WEdCFSkPoU pic.twitter.com/pht56VZGAq
— ANI (@ANI) March 24, 2023