Arya Six Pack: மீண்டும் சிக்ஸ் பேக் வைத்து அசத்திய ஆர்யா; மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக பக்கா மாஸ் லுக்குடன் அசத்தல் போட்டோ வெளியீடு.!

தமிழ் நடிகர்களில் சரத் குமார், விக்ரம், அர்ஜுன் உட்பட பல நடிகர்களின் வரிசையில், உடல் எடையை மெருகேற்றி இளைஞிகளின் கனவுக்கன்னியாக திகழும் நடிகர்களில் ஆர்யா குறிப்பிடத்தக்கவர்.

Arya Fit (Photo Credit: @AryaOfficial X)

மார்ச் 19, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா (Arya), 2021ல் சார்பட்டா பரம்பரை, எனிமி, 2022ல் கேப்டன், 2023ல் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் (Mr X) படத்தில் நடித்து வருகிறார். படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. Ladies Finger Samosa: இப்படியும் ஒரு சமோசாவா?.. நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான வெண்டைக்காய் சமோசா..! 

உடல் எடையை மெருகேற்றிய ஆர்யா: இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், ஆர்யா படத்திற்காக உடல் எடையை குறைந்து மீண்டும் சிக்ஸ் பேக் வைத்து அசத்தி இருக்கிறார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், 2023 மார்ச்சில் தொடங்கி, தற்போது வரை ஓயாத உடல் உழைப்பால் தனது உடல் அழகை மெருககேற்றி இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்து இருக்கிறார். பலருக்கும் உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் ஆர்யா, தினமும் பலமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை கொண்டவர் ஆவார். பலரும் அவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement