மார்ச் 19, புதுடெல்லி (New Delhi): இந்திய சமையல் என்பது உலகளவில் கவனிக்கப்படும் காரசாரமான, ருசியான உணவு கட்டமைப்பை கொண்டது ஆகும். கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீர் வரையிலும், மும்பையில் தொடங்கி அசாம், மணிப்பூர் வரையிலும் விதவிதமான பிராந்திய அளவிலான மாறுபாடுகொண்ட சுவை உணவுகள் நிறைந்து கிடக்கின்றன. பாரம்பரிய சமையலுடன், மேலைநாடுகளின் துரித உணவுகள் இந்தியாவுக்கேற்ப தயாரித்தும் பிரதானமாக விற்பனை செய்யப்படுகிறது. இவை நமது மக்களிடையே நீங்காத இடத்தையும் பெற்று இருக்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மூலைகளிலும் விற்பனை செய்யப்படும் சமோசா, வெங்காயம், உருளைக்கிழங்கு உட்பட பிற பொருட்களை மசாலாக்களுடன் சேர்த்து எண்ணெயில் பொரித்து சுடச்சுட வழங்கப்படும். சமோசாவை கடைகளில் வழங்கப்படும் சட்னி அல்லது சுவையான சாம்பாருடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். சமோசாவில் பல விதமான வகைகளும் இருக்கின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள சாந்தணி சவுக் பகுதியில் வெண்டைக்காயில் சமோசா தயாரித்து வழங்கப்படுகிறது. பார்க்கவே நாவை சுவைக்கவைக்கும் வெண்டைக்காய் சமோசாவை முடிந்தால் நமது ஊரிலும் தயாரித்து விற்பனை செய்தால் சாப்பிட்டு சுவை பார்க்கலாம். Aged Couple Killed: குடும்பச்சண்டையில் புதுமணப்பெண் தற்கொலை; ஆத்திரத்தில் மாமனார்-மாமியாரை எரித்துக்கொன்ற பெண்வீட்டார்.!
View this post on Instagram
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)