Vaa Varalam Vaa: பாலாஜி முருகதாஸின் முதல் திரைப்படம் டிசம்பர் 01-ல் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Vaa Varalam Vaa (Photo Credit: LatestLY)

நவம்பர் 03, சென்னை (Cinema News): எஸ்ஜிஎஸ் கிரியேட்டிவ் மீடியா (SGS Creative Media) சார்பில், எஸ்பிஆர் தயாரித்து வழங்கும் திரைப்படம் வா வரலாம் வா (Vaa Varalam Vaa). இயக்குனர் எல்.ஜி ரவிச்சந்திருடன் இணைந்து, தயாரிப்பாளர் எஸ்.பி.ஆரும் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்ற நடிகர் பாலாஜி (Balaji Murugadoss) முருகதாஸ், வா வரலாம் வா படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். Dhoni Handsome Look At SRK Birthday: ஷாருக்கானின் பிறந்தநாளில் அசத்தல் தோற்றத்துடன் தல தோனி; வெளியான போட்டோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி.! 

கதாநாயகியாக கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடித்திருந்த மஹானா சஞ்சீவி நடித்துள்ளார். வில்லனாக மைம் கோபியும், முக்கிய கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லி, காயத்ரி ரோமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

மேலும், நடிகை தீபா, நடிகர்கள் வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி உட்பட பலரும் நடித்துள்ளனர். சுமார் 40 குழந்தை நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளார்கள்.

தேனிசைத் தென்றல் என வருணிக்கப்படும் தேவாவின் இசையில், கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில், ராஜா முகமதின் எட்டிட்டிங்கில், நோபல் இயக்கத்தில், இடிமின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளுடன் படம் உருவாகியுள்ளது. Urfi Javed Arrested?: பிரபல ஹிந்தி நடிகை காவல்துறையினரால் கைது?.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி..! விபரம் உள்ளே.! 

இப்படத்தின் முதற்பார்வை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பு நிறுவனமான எஸ்ஜிஎஸ் கிரியேட்டிவ் மீடியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 01ம் தேதி வா வரலாம் வா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தற்போது படக்குழு ஈடுபட்டுள்ளதால், விரைவில் படம் குறித்து பல சுவாரஷ்ய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.