Snake Captured Fish in Falls (Photo Credit: @susantananda3 X)

ஜூன் 22, திருசூர் (Kerala News): வனங்களில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றும் தங்களின் வாழ்நாட்களை திறம்பட கடத்துவதற்கு, உணவுகளை வேட்டையாடியும் சாப்பிடும். இதில் ஒருசில விலங்குகள் தாவர உண்ணியாகவும், மற்றவை வேட்டையாடி சாப்பிடும் விலங்குகளாவும் இருக்கும். பாம்புகளை பொறுத்தமட்டில், அவை தன்னால் உன்ன முயன்ற இரைகளை வேட்டையாடும் சாப்பிடும். TN Weather Update: காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

மீன்களை காத்திருந்து வேட்டையாடிய பாம்புகள்:

ஆனால், பாம்புகள் நீரில் செல்லும் மீன்களை இலாவகமாக கவ்விப்பிடித்து சாப்பிடும் நிகழ்வை நேரில் பார்த்தது உண்டா?. பொதுவாக கரடிகள் பாறைகளில் அமர்ந்துகொண்டு, சிறிய அளவிலான நீர் வீழ்ச்சிகளில் இவ்வாறான வேட்டை முறையை பயன்படுத்தி மீன்களை கவ்விப்பிடித்து சாப்பிடும். தற்போது பாம்புகளும் அதுபோல வேட்டையாடி உணவை பிடிக்கின்றன.

கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் பாம்பு இலாவகமாக படுத்துக்கொண்டு மீன்களை வேட்டையாடியது. பார்க்கவே வியப்பூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. சுற்றுலாப்பயணி எடுத்த விடியோவை, ஐஎப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.