Thangalaan Teaser: தங்கலான் படத்தின் அசத்தல் டீசர் வெளியானது; இரத்தம் தெறிக்கத்தெறிக்க பரபரப்பு காட்சிகள்.!
தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார், பெங்களூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்தது.
நவம்பர் 01, சென்னை (Cinema News): கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், பா. ரஞ்சித் (Director Pa Ranjith) இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் (GV Prakash) குமார் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான் (Thangalaan).
இப்படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டகிரோன், ஹரி கிருஷ்ணன், பசுபதி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார், பெங்களூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில், படம் ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. Odisha Shocker: சந்தேகப்பட்ட கணவனின் உயிர்நாடியை அறுத்து, இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனைவி; கதறித்துடித்த கணவன்.!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இரத்தம் தெறிக்கத்தெறிக்க விக்ரம் தனது நடிப்பின் உச்சத்தை ஐ திரைப்படத்திற்கு பின்னர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கோலார் தங்கவயலை மையமாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ள நிலையில், தற்போது பா. ரஞ்சித் தனது பாணியில் தங்கலான் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.
(The above story first appeared on LatestLY on Nov 01, 2023 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

