Odisha Shocker: சந்தேகப்பட்ட கணவனின் உயிர்நாடியை அறுத்து, இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனைவி; கதறித்துடித்த கணவன்.!

எட்டு எட்டாக பிரிக்கப்பட்ட மனித வாழ்க்கையில், நமது விருப்பப்படி வாழ்ந்தாலும் நமது எண்ணங்கள் நமது உயர்வு-தாழ்வு மற்றும் உடல்நலனை தீர்மானிப்பவை ஆகும்.

Odisha Shocker: சந்தேகப்பட்ட கணவனின் உயிர்நாடியை அறுத்து, இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனைவி; கதறித்துடித்த கணவன்.!
Crime File Picture (Photo Credit: PIxabay)

நவம்பர் 01, ஒடிசா (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள அங்குலி மாவட்டம், காந்தாசர் கிராமத்தில் வசித்து வருபவர் பரமானந்த முதலி (வயது 45). தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில், எப்போதும் மனைவியின் மீது சந்தேகம் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் அவ்வப்போது தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வருவதும் இயல்பு என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் கணவன்-மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில், இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். Metro Shocking: டெல்லி மெட்ரோவில் அடுத்த சம்பவம்; அவசரப்படுத்திய சிறுநீரை கேனில் கழித்த பயணி.! 

இறுதியில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, மனைவிக்கு உச்சகட்ட ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அப்போது, மனைவி தனது கணவரின் ஆணுறுப்பை கத்தியால் துண்டித்திருக்கிறார்.

இதனால் பரமானந்தா உயிர்போகும் வலியில், இரத்தம் வெளியேறி கதறித்துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர் தரப்பில் இருந்து தற்போது வரை புகார் அளிக்கப்படவில்லை, தங்களிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

(The above story first appeared on LatestLY on Nov 01, 2023 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).