D51 Update: ஆந்திராவில் படப்பிடிப்பு நிறைவு; மும்பை செல்லும் தனுஷின் டி51 படக்குழு.!

தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்துள்ள நடிகர் தனுஷ், தனது 51 வது படத்தில் விறுவிறுப்புடன் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெறவுள்ளன.

D51 Update: ஆந்திராவில் படப்பிடிப்பு நிறைவு; மும்பை செல்லும் தனுஷின் டி51 படக்குழு.!
D51 Tripati Shoot Wrap (Photo Credit: @Chrissuccess X)

பிப்ரவரி 05, திருப்பதி (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் (Dhanush) நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் (Captain Miller) திரைப்படம் நல்ல வரவேற்பு & வசூலை குவித்தது. இப்படத்திற்கு பின்னர் தனுஷ் தனது எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ஐம்பதாவது திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

டி51 (D51 Movie) திரைப்படம்: பவர் பாண்டி (Power Pandi) திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷின் எழுத்து மற்றும் இயக்கம், நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இதனையடுத்து, தேசிய விருது பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் சேகர் கம்மலுவுடன் 51வது படத்தில் தனுஷ் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக டி51 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Meerut Shocker: அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு; அதிர்ச்சியில் உள்ளூர் மக்கள்..! 

திருப்பதி படப்பிடிப்பு தளத்தில் சர்ச்சை: ஆந்திர ரசிகர்களுக்காக சிறப்பு படமாக உருவாகும் டி51, தமிழிலும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் ராஸ்மிகா மந்தனா உட்பட பலரும் நடிக்க உள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்ற போது, போக்குவரத்து நெரிசல் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டது. பின் திருப்பதி கோவிலுக்கு சென்று தனுஷ் சாமி தரிசனம் செய்தார்.

மும்பை செல்லும் படக்குழு: இந்நிலையில், தற்போது முறையான அனுமதியுடன் பாதுகாப்போடு தனுஷின் ஐம்பதாவது படப்பிடிப்பு பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளன. ஆந்திராவில் டி51 படப்பிடிப்பு முதற்கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மும்பை செல்கிறது. அங்குள்ள தாராவி பகுதியில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

(The above story first appeared on LatestLY on Feb 05, 2024 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).