Siren Teaser: ஆக்சன்-திரில்லராக கலக்கும் ஜெயம்ரவி; சைரன் படத்தின் தெறிக்கும் டீசர் காட்சிகள் இதோ.!

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி உட்பட பலரும் சைரன் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Jayram Ravi's Siren Teaser (Photo Credit: YouTube)

நவம்பர் 12, சென்னை (Cinema News): ஹோம் மூவி மேக்கர்ஸ் (Home Movie Makers) தயாரிப்பில், ஜி.வி பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar) இசையில், ஆண்டனி பாக்யராஜ் (Antony Bhagyaraj) இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன்-திரில்லர் திரைப்படம் சைரன் (Siren Tamil Movie 2023).

இப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி (Jayam Ravi), கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh), அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran), சமுத்திரக்கனி (Samuthirakani), யோகிபாபு (Yogi Babu) உட்பட பலரும் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்திற்கு பின் நடித்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ICC CWC 2023: இறுதியில் ஆறுதல் வெற்றியடைந்த இங்கிலாந்து; இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதல்.! 

அதேபோல, அனுபமா பரமேஸ்வரன் தமிழுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையில் காட்சியளிக்கவுள்ளார். படத்தை ரூபன் எடிட் செய்து வழங்குகிறார். தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன. விரைவில் படத்தை திரைக்கு கொண்டுவரும் பணிகளை படக்குழு மேற்கொண்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement