நவம்பர் 12, கொல்கத்தா (Sports News): கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, நேற்று (11 நவம்பர் 2023) இங்கிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும், ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடரின் 44வது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் சார்பில் களமிறங்கிய ஜோ 72 பந்துகளில் 60 ரன்னும், ஜானி 61 பந்துகளில் 59 ரன்னும், டேவிட் 39 பந்துகளில் 31 ரன்னும், பென் 76 பந்துகளில் 84 ரன்னும் அதிகபட்சமாக அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர். ஆட்டத்தின் இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்களை எடுத்திருந்தது.
மறுமுனையில் 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தனது பல விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை சந்தித்தது. பாபர் 45 பந்துகளில் 38 ரன்னும், ரிஸ்வான் 51 பந்துகளில் 36 ரன்னும், சல்மான் 45 பந்துகளில் 51 ரன்னும், ஹாரிஸ் 23 பந்துகளில் 35 ரன்னும் அடித்திருந்தனர். Diwali Train Rush: ஏசி கோச்சை முன்பதிவில்லாத பெட்டியாக மாற்றிய தீபாவளி பயணிகள்; முன்பதிவு செய்தும் கிடைத்த ஏமாற்றம்..!
ஆட்டத்தின் முடிவில் 43.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் அணி 244 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக்கோப்பை சீசனில், முந்தைய உலகக்கோப்பை சீசன் தொடரின் வெற்றியாளர் பல போட்டிகளில் படுதோல்வி அடைந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த வெற்றி இங்கிலாந்து அணியின் ரசிகர்களுக்கு லேசான ஆறுதல் வெற்றியை மட்டுமே தரும். இன்று (நவம்பர் 12) இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான 45வது ஆட்டம், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
புள்ளிபட்டியலின்படி இறுதிப்போட்டிக்குள் நுழையும் தகுதிச்சுற்றில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் நவ.15, தென்னாபிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் நவ.16 அன்று மோதுகின்றன. நவ.15 & 16 அன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இறுதிப்போட்டியானது நவமபர் 19ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும். இதனை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், இணையவழியில் ஹாட் ஸ்டாரிலும் கண்டுகளிக்கலாம்.
View this post on Instagram