Actor Jiiva Car Crash: நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து.. குடும்பத்துடன் சென்றபோது நடந்த விபரீதம்..!
கள்ளக்குறிச்சியில் நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 11, சின்னசேலம் (Cinema News): கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே நடிகர் ஜீவா (Actor Jiiva) சென்ற கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி (Car Crash) விபத்துக்குள்ளானது. தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு (Kallakurichi To Chennai) திரும்பியபோது, சின்னசேலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் கார் வந்த திசையில் சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனம் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதி விபத்து (Road Accident) ஏற்பட்டது. Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. மக்களால் வெளியிடப்பட்ட 2வது ப்ரோமோ..!
இதில், காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, மாற்று கார் மூலமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி சேலத்திற்கு சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னசேலம் காவல்துறையினர் விபத்தில் சிக்கிய காரை பறிமுதல் செய்து, விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 05:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

