Kamal Watched Manjummel Boys: மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவுடன் படம் பார்த்து ரசித்த கமல் ஹாசன்; தமிழத்தில் வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படம்.!

காதல் ரசம் கொண்ட பிரேமம் திரைப்படத்திற்கு பின்னர், தமிழ் ரசிகர்களிடையே மலையாள மொழியில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் படம் வரவேற்பை பெற்று இருக்கிறது.

Kamal Watched Manjummel Boys: மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவுடன் படம் பார்த்து ரசித்த கமல் ஹாசன்; தமிழத்தில் வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படம்.!
Manjummel Boys Watched by Kamal Hassan (Photo Credit: Wikipedia)

பிப்ரவரி 29. சென்னை (Cinema News): இயக்குனர் சிதம்பரத்தின் இயக்கத்தில், பாபு சாஹிர், சோப்பின் சாஹிர், ஸ்வன் ஆண்டனி ஆகியோரின் சார்பில் பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மேல் பாய்ஸ் (Manjummel Boys). படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்து இருக்கிறார்.

படத்தின் மையக்கரு: கிரைம் தில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், கமல் ஹாசனின் குணா திரைப்படம் படம்பிடிக்கப்பட்ட இடத்தை காணச்செல்லும் கேரள இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனை மற்றும் அதன் முடிவை கதைக்களமாக கொண்டது.

தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பு: அங்கு சென்ற இளைஞர்களுக்கு நடந்தது என்ன? அவர்கள் தப்பித்தார்களா? என்பதை மையகருத்தாக கொண்டு கிரைம் பாணியில் படம் பதைபதைப்புடன் நகரும். மலையாள மொழியில் வெளியான திரைப்படம், அதன் வரவேற்பால் மொழிகளை கடந்து திரையில் சாதித்து வருகிறது. WhatsApp Search Update: அசத்தல் அறிவிப்பு.. இனி மெசேஜ்களை தேதி வாரியாகவும் தேடலாம் - வாட்சப்பின் கலக்கல் அப்டேட்..! 

Manjummel Boys Poster (Photo Credit: Wikipedia)

கமல்ஹாசன் படம் பார்த்தார்: இது படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்த, தொடர்ந்து தமிழக திரைபிரபலங்களும் படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல் ஹாசன் தனது அலுவலகத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை கண்டு படக்குழுவை பாராட்டினார்.

படக்குழு: உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சோப்பின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, லால், தீபக் பாரம்போல், ஆபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குறைந்த, சந்து சலீம்குமார் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 07:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).