WhatsApp (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 29, கலிபோர்னியா (Technology News): மெட்டாவில் அங்கமாகிப்போன வாட்சப் செயலியில், அடுத்தடுத்த பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டு பயனர்களின் உபயோகம் முன்னேற்றம் அடைவதால், தொடர்ந்து வாட்ஸப்க்கான (WhatsApp Update) வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறுஞ்செய்திகளை எழுத்துக்களாக அனுப்புவதில் தொடங்கி போட்டோ, வீடியோ, ஜிப் பைல்கள் உட்பட பலவற்றையும் எளிதில் பகிரும் வசதி வாட்சப்பில் இருக்கிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 500 மில்லியன் பயனர்கள்: சர்வதேச அளவில் மாதத்திற்கு 2.78 பில்லியன் மக்கள் உபயோகம் செய்யும் வாட்சப் செயலியை, இந்தியாவில் மட்டும் தினமும் 487 மில்லியன் மக்கள் உபயோகம் செய்கின்றனர். தொடர்ந்து ஆண்டாண்டுக்கு வாட்சப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, மெட்டா நிறுவனத்திற்கு நல்ல வருவாயை தருகிறது. Jamtara Train Accident: தீப்பிடித்த ரயிலில் இருந்து உயிர் தப்பிக்க முயற்சி: ரயில் மோதியதில் 12 பயணிகள் பரிதாப பலி..! 

WhatsApp (Photo Credit: Pixabay)

புதிய அப்டேட் அறிவிப்பு: வாட்ஸப்பில் தற்போது வரை பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செல்போன்களில் தேதியை குறிப்பிட்டு குறுஞ்செய்திகளை தேடும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்து இருக்கிறார்.

காதல் ஜோடிகள் தேடிப்பாருங்க: முன்னதாக நாம் பேசிய அல்லது அனுப்பிய தகவல் ஒன்றை தேட வேண்டும் என்றால், அதன் பெயரை குறிப்பிட்டு அல்லது முந்தைய தகவலை தள்ளிவிட்டு தேடவேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், தேதி நினைவில் வைத்திருப்போர், இனி தேதியை கொண்டே அனுப்பிய செய்தியை எளிதில் தேடிப்பார்க்கலாம். இது காதல் ஜோடிகளுக்கு தாங்கள் முந்தைய ஆண்டில் பேசிய தகவலை தேதியில் தேடி கண்டு மகிழ கிடைத்த அசத்தல் வாய்ப்பாகவும் கவனிக்கப்படுகிறது.