Actor Nasser Father Death: நாசர் தந்தை மறைவு.! கண்ணீரில் தவிக்கும் குடும்பம்.! இரங்கல் தெரிவிக்கும் நண்பர்கள்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசரின் தந்தை இன்று காலமானார். 95 வயதாகி இருக்கும் இவரது தந்தையின் உடல் இறுதி அஞ்சலிக்காக செங்கல்பட்டில் இருக்கும் அவரது சொந்த ஊரில் வைக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 10, சென்னை (Cinema News): மக்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்கள் பலரும் வியந்து ரசிக்கக்கூடிய ஒரு முன்னணி நடிகர் தான் நாசர். மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் என்ற பொறுப்பையும் வகிக்கிறார். இவரது தந்தை மெஹபூப் பாட்ஷா இன்று காலமானார். 95 வயதாகி இருக்கும் இவரது தந்தை முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.
நகைகளுக்கு பாலிஷ் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த போதும், தனது மகனின் விருப்பத்திற்கு ஏற்ப நாசரின் தந்தை, அவரை நடிப்பு கலை பயிலும் கல்லூரியில் படிக்க வைத்தார். படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்காத போது, நாசர் பிரபல ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். Opening Batsman Shubman Gill: துவக்க வீரர் சுப்மன் கில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்.! முழுமையான ஓய்வு.! போட்டிகளில் இருந்து விலகல்.!
அப்போது அவர் தந்தை தான் சினிமாவில் நுழைய வாய்ப்பு தேட ஊக்கப்படுத்தி இருக்கிறார். நாசர் தந்தையின் உடல் செங்கல்பட்டு மாவட்டத்தின் தட்டான் மலையில் இருக்கும் அவரது சொந்த வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
நாசரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய சினிமா நண்பர்கள் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Oct 10, 2023 08:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

