அக்டோபர் 10, சென்னை (Sports News): இந்த ஆண்டு இந்திய அணி விளையாடிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சுப்மன் கில், துவக்க வீரராக களம் இறங்கி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் உலகக் கோப்பையில் விளையாடுவது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று பேசப்பட்டது
சென்னையில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ள வந்த சுப்மன் கில்லுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டது. அதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. TNEB Updates: மின்சார தேவைகளுக்கு எளிய தீர்வு.! இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.! தமிழக மின்சார ஒழுங்குமுறைஆணையத்தின் அறிவிப்பு.!
முதலில் காய்ச்சல் அதிகமாகவே, மருத்துவமனையில் ஆலோசனை பெறப்பட்டு, அறையிலேயே அவருக்கு மருந்துகள் செலுத்தப்பட்டது. பின்பு அவர் சென்னையின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு டெங்கு (Dengue) காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவரது ரத்தத்தில் பிளேட்லெட் (Blood Platelets) அளவுகள் குறைவாக இருந்தபோதும், ஒரே நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் இருந்தபடி முழுமையாக ஓய்வெடுக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது.
டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு அவரது உடல் நலம் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று தெரிகிறது. அதனால் அவர் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்று பிசிசிஐ (BCCI) நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.