Salaar Part 1 The Ceasefire Trailer: மரண மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது சலார் திரைப்படத்தின் டிரைலர்.. அடித்து நொறுக்கும் பிரபாஸ்.! வீடியோ உள்ளே.!

கன்னட திரையுலகின் மீது இருந்த பல்வேறு குற்றசாட்டுகளை கண்ணாடிகள் மீது கற்கள் எறிந்தார் போல உடைத்து நொறுக்கிய திரைப்படத்தை வழங்கிய ஹோம்பலே நிறுவனம், அடுத்த அதிரடிக்கு தயாராகி உள்ளது.

Salaar Part 1 The Ceasefire Trailer: மரண மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது சலார் திரைப்படத்தின் டிரைலர்.. அடித்து நொறுக்கும் பிரபாஸ்.! வீடியோ உள்ளே.!
Salaar Part One The Ceasefire Movie Trailer (Photo Credit: YouTube)

டிசம்பர் 01, சென்னை (Cinema News): கே.ஜி.எஃப் 1 & 2 படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் (Prashanth Neel) இயக்கத்தில், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரூபாய் 400 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் சலார் பார்ட் 1 கேஸ்பயர் (Salaar: Part 1 – Ceasefire).

நடிகர் - நடிகைகள்: இப்படத்திற்கு கே.ஜி.எப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் (Ravi Basrur) இசையமைத்திருக்கிறார். படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதிஹாசன், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், பிரியா ரெட்டி, ராமச்சந்திர ராஜு, மைம் கோபி, பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ளனர். ED Officer Arrested: ரூ.20 இலட்சம் இலஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரியை 30 கி.மீ விரட்டிச்சென்று கைது செய்த இலஞ்ச ஒழிப்புத்துறை: தமிழகத்தில் அடுத்த பரபரப்பு சம்பவம்.! 

5 மொழிகளில் வெளியாகும் திரைப்படம்: இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில், சர்வதேச அளவில் டிசம்பர் 22 ஆம் தேதி 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் முதல் பாகம், கே.ஜி.எஃப் போல பிரம்மாண்ட கதையுடன் தயாராகியுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிரைலர் காட்சிகள்: படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில், கே.ஜி.எஃப் ஐ போல அல்லாமல் மாறுபட்ட ஒரு கோணத்தில், பரபரப்பான ஆக்சன் காட்சிகளுடன் படம் ஐமேஸ் தரத்தில் உருவாகியுள்ளது.

சலார் 2-க்கு முன் கே.ஜி.எப் 3: கே.ஜி.எப் படத்தின் மீதான தாக்கம் கே.ஜி.எப் 2 மற்றும் கே.ஜி.எப் 3ம் பாகம் மீது பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல, தற்போது சலார் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது முதல் பாகம் மட்டுமே. கே.ஜி.எப் மூன்றாம் பாகமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

(The above story first appeared on LatestLY on Dec 01, 2023 08:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).