நவம்பர் 01, மதுரை (Madurai News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொது அஹ்ரகார பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், மருத்துவராக (Govt Hospital Doctor) வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்து, அதுதொடர்பாக வருமான வரித்துறை (Income Tax Raid) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பதவி உயர்வும், பணியிட மாற்றமும்: இதற்கிடையில், 2018ம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமலாக்கத்துறையில் பணியாற்றி வந்த அங்கித் திவாரி என்பவர், அதே ஆண்டில் பதவி உயர்வு பெற்று இருக்கிறார். அவ்வாண்டு மதுரையில் உள்ள அமலாக்கத்துறை (Enforcement Directorate) அலுவலகத்தில் உயர் பொறுப்பிலும் பணிக்கு சேர்ந்துள்ளார்.
அரசு மருத்துவருக்கு வந்த மிரட்டல்: இவர் திண்டுக்கல் அரசு மருத்துவரை தொடர்புகொண்டு, தங்களின் மீதான சொத்துகுவிப்பு வழக்கு மறுவிசாரணை எனது கவனத்திற்கு வந்துள்ளது. அதற்கான நியமன அதிகாரியாக நான் செயல்படுவேன். உங்களிடம் விசாரணை நடத்தாமல், வழக்கை முடித்து வைக்க விரும்பினால் ரூ.3 கோடி கையூட்டு வேண்டும் என அங்கித் பேசியுள்ளார். Crab Soup Preparation: சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டுமா?. அசைவ பிரியர்களுக்கு ஏற்ற நண்டு சூப்.. செய்வது எப்படி?..!
அமலாக்கத்துறை அதிகாரியின் இலஞ்ச வேட்கை: இதனால் பதறிப்போன திண்டுக்கல் மருத்துவர் பேரம் பேசி, ரூ.51 இலட்சம் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, சுரேஷ் பாபுவும் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் ரூ.20 இலட்சம் ரொக்க பணத்தை, மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து வழங்கி இருக்கிறார்.
நெருக்கடி கொடுத்த அமலாக்கத்துறை அதிகாரி: எஞ்சிய ரூ.31 இலட்சம் பணத்தையும் விரைந்து வழங்கிட வேண்டும் என அங்கித் திவாரி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சுரேஷ் பாபு, ரூ.20 இலட்சம் பணத்துடன் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து விபரத்தை கூறியுள்ளார்.
ஆப்பு செதுக்கிய மருத்துவரின் இராஜதந்திரம்: அதிகாரிகளின் ஆலோசனைப்படி சுரேஷ் பாபு ரூ.20 இலட்சத்தை அங்கித் திவாரியிடம் தோமையாபுரம் பகுதியில் கொடுக்க, அவர் காரில் வைக்கச்சொல்லி புறப்பட்டுள்ளார். களத்தில் இறங்கிய அதிகாரிகள் திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கொடைரோடு சுங்கச்சாடியில் வைத்து திரைப்பட பாணியில் அங்கித்தின் காரை நிறுத்தி கைது செய்தனர். சுமார் 30 கி.மீ தூரம் விரட்டிச்சென்று அங்கித் கைது செய்யப்பட்டார்.
திரைப்பட பாணியில் நடவடிக்கை: அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் - இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இடையே கருத்து முரண் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கித் தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் நிலையில், அதிகாரிகள் அங்கித்தின் வீடு மற்றும் மதுரை தபால் தந்தி நகரில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.