Salaar Part 1 Ceasefire Trailer: ஆக்சனில் மிரட்டும் பிரபாஸ்.. சலார் படத்தின் புதிய டிரைலர் இதோ.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு.!
டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சலார் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு படக்குழு டிரைலர் வெளியிட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
டிசம்பர் 18, சென்னை (Chennai): கே.ஜி.எப் 1 & 2 திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைந்து அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கி வந்தது. பாகுபலி 1 & 2 திரைப்படத்திற்கு பின்னர் பிரபாஸுக்கு கிடைத்த வரவேற்பு, பிரசாந்த் நீல் - பிரபாஸ் இணைந்து பணியாற்ற உந்துகோலாக அமைந்தது.
சலார் படக்குழு: கன்னட திரைப்படங்கள் மீது வைக்கப்பட்ட பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கே.ஜி.எப் வெளியாகி அகில இந்திய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் மாபெரும் சாதனை படைத்தது, வசூலை வாரிக்குவித்தது. தற்போது பிரபாஸ், பிரித்விராஜ், சுருதி ஹாசன், மீனாட்சி சௌதாரி, ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜான் விஜய், மீம் கோபி உட்பட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் சலார் (Salaar Part 1 Ceasefire). Flood Warning Issued: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு… மதுரை மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!
விறுவிறுப்பாக முன்பதிவு செய்யப்படும் இருக்கைகள்: இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. உலகளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் முன்னதாகவே படம் பார்க்க புக்கிங் செய்து வருகின்றனர்.
புதிய டிரைலர் வெளியீடு: சமீபத்தில் படத்தின் டிரைலர் ஒன்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படக்குழு மீண்டும் ரசிகர்ளுக்கு இன்ப அதிர்ச்சி தரும்பொருட்டு, மற்றொரு டிரைலர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. உங்களின் பார்வைக்கும் டிரைலர் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Dec 18, 2023 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

