Vaigai flooded (Photo Credit: @SowmiyaeventsI X)

டிசம்பர் 18, மதுரை (Madurai): குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வைகை அணையின் நீர் மட்டம் 66.01 அடியை எட்டியுள்ளது. Flood Safety Tips: மழை பேரிடரில் சிக்கிட்டீங்களா? தற்காத்து கொள்வது எப்படி?..!

மதுரை மக்களுக்கு எச்சரிக்கை: இதனால் தற்போது வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு வந்து கொண்டிருக்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை (Flood Warning Issued)  விடப்பட்டுள்ளது.