Salaar Prithvi Look: மிரட்டலான பிரித்விராஜ் சுகுமாரனின் லுக்.. சலார் படத்தில் பதறவைக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பு.. போஸ்டர் வெளியீடு.!

கேஜிஎப் இரண்டு பாகங்களின் அமோக வெற்றியைத்தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகும் சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

Salaar Prithvi Look: மிரட்டலான பிரித்விராஜ் சுகுமாரனின் லுக்.. சலார் படத்தில் பதறவைக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பு.. போஸ்டர் வெளியீடு.!
Prabhas | Prithviraj Sukumaran (Photo Credit: Instagram)

அக்டோபர் 16, பெங்களூர் (Cinema News): கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை எடுத்து, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், ரவி பசூர் இசையில், பிரபாஸ் நடிப்பில் ஆக்சன்-திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது சலார் தி கேஸ் பயர் (Salaar: Part 1 – Ceasefire).

இப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், மீனாக்ஷி சௌதாரி, சுருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, தின்னு ஆனந்த், ராமச்சந்திர ராஜு, மது குருசாமி உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர்.

கேஜிஎப் இரண்டு பாகங்களின் அமோக வெற்றியைத்தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகும் சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. விரைவில் இவரின் இயக்கத்தில் கேஜிஎப் படத்தின் அடுத்த பாகமும் உருவாகி வெளியாகவுள்ளது. Samsung Galaxy Z Flip5: நாளை இந்தியாவில் விற்பனைக்கு தயாராகிறது சாம்சங் இசட் பிலிப் 5 ஸ்மார்ட்போன்.. சிறப்பம்சங்கள் இதோ.!  

Prabhas Salaar Still (Photo Credit: Instagram)

யுவி கிரியேஷன்ஸ், ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம், ரூ.200 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கேஜிஎப் படத்தில் பணியாற்றிய படத்தயாரிப்பு & தொழில்நுட்பக்குழு இப்படத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில், இன்று மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு பிறந்தநாள் ஆகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவரின் அட்டகாமசமான தோற்றம் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக பிரித்விராஜ் வரதராஜ மன்னார் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகிறது.

சலார் திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

எக்ஸ் (ட்விட்டர்) பதிவு:

இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Hombale Films (@hombalefilms)

(The above story first appeared on LatestLY on Oct 16, 2023 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).