Samsung Galaxy Z Flip5 (Photo Credit: Samsung.com)

அக்டோபர் 16, புதுடெல்லி (Technology News): செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில், சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விரும்பிகளிடையே நன்மதிப்பை பெற்ற நிறுவனம் சாம்சங் (Samsung).

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் தரத்தின் காரணமாக, பலரும் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது இருக்கிறது. இந்தியாவிலும் சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனை என்பது எப்போதும் முன்னணியில் இருக்கும். IOC Approves T20 Cricket: சர்வதேச ஒலிம்பிக்கில் இடம்பெற்றது கிரிக்கெட்; 2028ல் ஒலிம்பிக் டி20 ஆட்டம்.! 

தற்போது சாம்சங் நிறுவனம் மடிக்கும் வகையில் உள்ள Flip மாடல் ஸ்மார்ட்போனை நாளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. அக். 17ம் தேதியான நாளை Samsung Galaxy Z Flip 5 ஸ்மார்ட்போன் மஞ்சள், புதினா பச்சை, லாவண்டர், கிரீம், கிராபைட் நிறத்தில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

120 Hz புதுப்பிப்பு திறன், 6.7 இன்ச் AMOLED 2X டிஸ்பிளே, 3.4 இன்ச் Super AMOLED டிஸ்பிளே, 12MP+12MP பின்பக்க கேமிரா, 10 MP செல்பி கேமிரா, 8GB RAM மற்றும் 128GB Internal Storage வசதி, 3,700 mAh பேட்டரி திறன் உட்பட பல சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன் விரும்பிகளின் மாற்றத்திற்கான நேரம் இது ஆகும்.