Rajinikanth on TVK Maanadu: தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி; நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.!

தீபாவளியன்று நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்ததுடன், தவெக மாநாடு வெற்றி என பேசினார்.

Rajinikanth on TVK Maanadu: தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி; நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.!
TVK Vijay | Rajinikanth (Photo Credit: @TVKVijayhq / @PolimerNews X)

அக்டோபர் 31, போயஸ் கார்டன் (Cinema News): உலகெங்கும் உள்ள இந்துக்களால் தீபாவளி 2024 பண்டிகை இன்று சிறப்பிக்கப்படுகிறது. பலரும் தீபாவளியை மகிழ்ச்சியாக சிறப்பிக்க சொந்த ஊர் வந்துள்ளனர். இன்று காலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி பலரும் பட்டாசுகளை வெடித்து தீபஒளி பண்டிகைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து:

இந்நிலையில், சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேரில் சாதித்து தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்தார். ரஜினிகாந்தின் வருகையை எதிர்பார்க்காத ரசிகர்கள், ரஜினியை கண்டதும் தலைவா, கடவுள் ரஜினி என தங்களின் ஆவேசமான குரலை அன்பாக வெளிப்படுத்தி இருந்தனர். அதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் ஒருசில நிமிடங்கள் பேசினார். Kanguva Editor Nishadh Yusuf: கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மறைவு.. திரைத்துறையினர் அதிர்ச்சி.! 

மாநாடு வெற்றி:

அப்போது ரஜினிகாந்த் கூறுகையில், அனைவர்க்கும் எனக்கிது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. அனைவரும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நடிகர் விஜயின் தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி. அதனை சிறப்பாக அவர்கள் நடத்தி முடித்துள்ளார்கள் எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

கூலி திரைப்படம்:

நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

(The above story first appeared on LatestLY on Oct 31, 2024 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).