Kanguva Editor Nishadh Yusuf: கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மறைவு.. திரைத்துறையினர் அதிர்ச்சி.!

கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் இன்று அதிகாலை கொச்சியில் அவரது வீட்டில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.

Kanguva Editor Nishadh Yusuf: கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மறைவு.. திரைத்துறையினர் அதிர்ச்சி.!
Nishadh Yusuf (Photo Credit: Instagram)

அக்டோபர் 30, கொச்சி (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கே.எஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா (Kanguva). கேஇ ஞானவேல் ராஜா தயாரிப்பில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் உருவாகியுள்ளது. ஐமேக்ஸ் தரத்தில், ரூ.300 கோடி செலவில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தில், நடிகர் சூர்யா பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. தீபாவளிக்கு என்ட்ரியாகும் வைல்ட் கார்டு போட்டியாளர் யார்?!

இப்படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் அண்மைய்ல் உயிரிழந்த நிலையில், தற்போது எடிட்டர் காலமாகியுள்ளார். எடிட்டர் நிஷாத் யூசுப் (வயது 43) இன்று அதிகாலை கொச்சியில் அவரது வீட்டில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கு காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த தல்லுமலா படத்தில் பணியாற்றியதன் மூலம் பேமஸ் ஆன நிஷாத் யூசுப் (Editor Nishadh Yusuf), அந்த படத்திற்காக இவருக்கு கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது. இவரது திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 30, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).