Rajinikanth Hospitalizes: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி.. முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்.! விபரம் உள்ளே.!

திடீர் உடலநலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

Rajinikanth Hospitalizes: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி.. முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்.! விபரம் உள்ளே.!
Rajinikanth (Photo Credit: @ANI X)

அக்டோபர் 01, போயஸ் கார்டன் (Cinema News): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் இறுதியாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. வரும் அக்.10 அன்று படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து, அவர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இதற்காக அவ்வப்போது படப்பிடிப்பு தலங்களுக்கு சென்று, பின் மீண்டும் அவர் சென்னை திரும்பி வருகிறார். Cooku With Comali Season 5: குக் வித் கோமாளி வெற்றியாளரானார் பிரியங்கா.. பரிசுத்தொகை எவ்வுளவு தெரியுமா?.!

மருத்துவமனையில் அனுமதி:

இதனிடையே, நேற்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு (Rajinikanth Health Condition) ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக குடும்பத்தினரால் மீட்கப்பட்டு, அப்பலோ (Chennai Apollo Hospital) மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்? என தெரியவில்லை. இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் (MK Stalin), நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற்று வரவேண்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Oct 01, 2024 07:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).