செப்டம்பர் 30, ஈவிபி சிட்டி (EVP Flim City): விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி (Cooku With Comali) நிகழ்ச்சி, தற்போது நேற்றுடன் ஐந்தாவது சீசனை நிறைவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 27 முதல் தொடங்கி ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிகழ்ச்சியில், இந்த சீசனில் 10 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் 6 பேர் மட்டும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, இறுதிப்போட்டியில் சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, முகமது இர்பான், பூஜா வெங்கட், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். போட்டியின் நடுவர்களாக செப் தாமோதரன், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் இருந்தனர். ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக மெய்யழகன் படக்குழு:
அக்.06ம் தேதி முதல் விஜய் (Vijay Television) தொலைக்காட்சியில் பிக் பாஸ் (Bigg Boss Season 8 Tamil) நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பதால், குக் வித் கோமாளியும் விரைந்து முடித்துக்கொள்ளப்பட்டது. நேற்று இறுதிப்போட்டிக்கு பரபரப்புடன் நடைபெற்ற நிலையில், நேற்று மதியம் 01:30 மணிமுதல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு, இறுதியாக போட்டியின் முடிவில் வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு விருந்தினராக கார்த்திக் - அரவிந்த் சுவாமி நடித்து வெளியான மெய்யழகன் படக்குழுவினரும் கலந்துகொண்டு இருந்தனர். Cooku With Comali 5: இன்றுடன் நிறைவுபெறும் குக் வித் கோமாளி 5: இறுதிப்போட்டியில் யார்?.. லிஸ்ட் இதோ.!
பிரியங்கா (Vijay TV Priyanka Deshpande) வெற்றி:
இந்நிலையில், இறுதி போட்டியில் மேற்கூறிய ஆறு போட்டியாளர்களும் கலந்து கொண்ட நிலையில், பிரியங்கா - ராமர் ஜோடியானது டைட்டில் பட்டத்தை தட்டிச்சென்றது. இதில் வெற்றி பெற்ற பிரியங்காவுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும், கோமாளியான ராமருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவதாக வெற்றி பெற்ற சுஜிதா - புகழ் ஜோடிக்கு ரூபாய் ஒரு லட்சமும் பரிசு வழங்கப்பட்டது, கோமாளியாக போட்டியில் கலந்துகொண்ட குரேசிக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக பிரியங்கா டைடில் வின்னர், இர்பான் இரண்டாவது வின்னர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட பின்னர் அதிகாரபூர்வ தகவல் அனைவருக்கும் சென்றடைந்துள்ளது.
மணிமேகலை விவகாரம்:
கடந்த 21 வது எபிசோட் வரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மணிமேகலை - ரக்சன் இணைந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவர் தனது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் போட்டியாளர் ஒருவர் தனது பணியில் குறுக்கிடுவதால், நான் அந்த பொறுப்பில் இருந்து வெளியேறிக்கொள்கிறேன் என தெரிவித்து அதிர்ச்சி தந்திருந்தார். தற்போது வரை மணிமேகலையின் வெளியேற்றத்திற்கு காரணம் விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நபரும், அந்த போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளரும் என நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் - விடிவி கணேஷ் காமெடி காட்சிகள்:
மீண்டும் மீண்டும் ah.. 🤣
CookuWithComali5 Grand Finale - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #CookuWithComali5 #CWC5 #CookuWithComaliSeason5 #VijayTelevision #VijayTV pic.twitter.com/vR2z4pMTLa
— Vijay Television (@vijaytelevision) September 29, 2024