Animal Movie Poster | Ranbir Kapoor (Photo Credit: Instagram)

டிசம்பர் 01, சென்னை (Chennai): சந்திப் வாங்கா ரெட்டி இயக்கத்தில், ப்ரீதம் இசையில், டி-சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரூபாய் 100 கோடி பொருட்செளவில் பிரமாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் அனிமல் (Animal 2023 Movie). இப்படம் ஹிந்தியில் தயாராகி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு: இன்று காலை முதலாகவே ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து படத்தை பார்த்து வருகின்றனர். பல மாநிலங்களில் காலை முதலாக சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட்டன. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. படம் பார்த்துவரும் ரசிகர்கள் பலரும், தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் - நடிகைகள்: படத்தில் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), அணில் கபூர், பாபி டுயோல், ராஷ்மிகா மந்தனா, திருப்தி திமிரி, பப்லு பிரித்திவிராஜ், சக்தி கபூர், பிரேம் சோப்ரா, சுரேஷ் ஓப்ராய் உட்பட பலரும் நடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 2020-ல் படத்தின் தயாரிப்பு பணிகள் ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டு, தற்போது டிசம்பர் 1, 2023 அன்று படம் வெளியாகியுள்ளது. WhatsApp Feature Update: இனி 2 பாஸ்வேர்ட்.. போனை யார் எடுத்தாலும் பயம் வேண்டாம்: வாட்சப் பயனர்களுக்கு உற்சாக செய்தி..! 

Animal Movie Part 2 (Photo Credit: @saikrishna_TH X)

கொரோனா பரவலில் தள்ளிப்போனது: இடையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிப் போயின. குலுமணாலி, மும்பை, குருகிராம், டெல்லி, பஞ்சாப், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் படப்பிடிப்பானது விறுவிறுப்புடன் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதமே படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிகட்டமாக தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முழுமையடையவில்லை. இதனால் படம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது.

சர்ச்சையான முத்தக்காட்சி: ரன்பீர் கபூருக்கு பிரம்மாஸ்தா திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள திரைப்படமாக அனிமல் இருந்தது. இப்படத்தின் பாடல் காட்சிகளில் அதிக முத்தக்காட்சிகளும் இடம்பெற்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தணிக்கைக்குழுவும் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பையும் படத்தின் இறுதியில் படக்குழு பதிவு செய்துள்ளது.

நீண்ட நேரம் ஓடும் இந்திய திரைப்படம்: அனிமல் திரைப்படம் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் 201 நிமிடங்கள் (3 மணிநேரம் 21 நிமிடம்) திரையிடப்படும் படமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெற்றி இனி வரும் நாட்களில் வெளியாகும் படங்களின் நேரத்தினை மாற்றி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.