WhatsApp (Photo Credit: Pixabay)

டிசம்பர் 01, புதுடெல்லி (New Delhi): கடந்த 2009ம் ஆண்டு குறுகிய வட்டத்தில் இயங்கி வந்த வாட்சப் (WhatsApp), 2014ல் முகநூலின் அறிமுகத்திற்கு பின்னர் பேஸ்புக் குழுமத்துடன் இணைக்கப்பட்டு சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டது. பயனர்களில் இன்டர்நெட் வசதியுடன் எழுத்துக்கள், புகைப்படங்கள், விடியோக்கள் வழியில் தகவலை பகிர வாட்சப் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது.

வாட்சப் பயனர்கள்: தற்போது, தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சத்தின் கீழ், பல்வேறு புதுப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன. பய்னர்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இன்றளவில் வாட்சப்பை சர்வதேச அளவில் தினமும் 2.7 பில்லியன் மக்கள் உபயோகம் செய்கின்றனர். இவர்களிடம் இருந்தும் பயனர்களின் விருப்பத்தை வாட்சப் நிறுவனம் சேகரித்து புதுப்பிப்புகளை வழங்குகிறது. Cockroach in Biryani: ஆசையாக சாப்பிட்ட பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி.. பதறிப்போன உணவுப்பிரியர்.. வைரல் விபரம் இதோ.! 

புதுப்புது அப்டேட்: சமீபத்தில் எச்.டி தரத்திலும், சாதாரணமாகவும் புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்புவது, வாட்சப் ஷாட்களை லாக் (WhatsApp Chat Lock) செய்வது தொடர்பான சிறப்பம்சங்களால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தனித்தனி பாஸ்வேர்ட்: தற்போதைய நிலையில் செல்போனின் பாஸ்வேர்டை அப்படியே பயன்படுத்தி வாட்ஸாப்க்குள் நுழைந்து அதனை உபயோகம் செய்யலாம். ஆனால், இன்றில் இருந்து நாம் வாட்சப்-க்கு என தனியாக பாஸ்வேர்டையும் உருவாக்கி தனித்தனியே பயன்படுத்தலாம். இந்த தகவலை வாட்சப் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

வாட்சப்-க்கும் தனி பாஸ்வேர்ட் வராதா? என ஏங்கிக்கிடந்த பலரும் இந்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.