Kantara Chapter1: காந்தாரா தரிசனத்திற்கு தயாராகுங்கள்: காந்தாரா முதல் பாகத்தின் முதற்பார்வை வெளியீடு தேதி அறிவிப்பு.!
காந்தாரா சேப்டர் 1 படத்தின் முதற்பார்வை 27ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளதால், காந்தாரா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நவம்பர் 25, பெங்களூர் (Cinema News): கடந்த 2022ம் ஆண்டு, 30 செப்டம்பர் 2022 அன்று வெளியாகி, ரூ.16 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் காந்தாரா (Kantara). இப்படம் திரையரங்கில் வெளியாகி எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து, பல மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டு, உலகளவில் ரூ.450 கோடி வசூல் செய்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பல வடமாநிலங்களில் பல நாட்கள் வெற்றிகரமாக மக்களின் பேராதரவுடன் படம் வரவேற்கப்பட்டது.
இப்படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டியே (Rishab Shetty) எழுதி, இயக்கி இருந்தார். படத்தில் சப்தமி கௌடா, கிஷோர், அச்யுத் குமார் உட்பட பலரும் நடித்து இருந்தனர். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து இருந்தார். கர்நாடக - கேரளா மாநிலத்தில் உள்ள மக்களால் வணங்கப்படும் பஞ்சுருளி தெய்வத்தை நம்பிய மக்கள் ஊரின் முக்கிய குடும்பத்தால் வாழ வைக்கப்பட்டு, பிந்தைய தலைமுறையால் மறைமுகமாக ஏமாற்றப்பட்டு, பின் அரக்கர்களின் வதம் தொடர்பாக கதையம்சம் இருந்தது. Hide and Seek Game Ends Death: ப்ரீசரில் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி விளையாடிய சகோதரிகள் பரிதாப பலி: பெற்றோர்களே உஷார்.!
இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாகமாக காந்தாரா முதல் பாகம் (Kantara Chapter 1) படம் தயாராகியுள்ளது. இதற்கான அனுமதியை இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி பஞ்சுருளி தெய்வத்திடம் இருந்து பெற்ற நிலையில், தற்போது படம் வெளியீடுக்கு தயாராகி வருகிறது.
விரைவில் படம் வெளியாவதை உறுதி செய்யும்பொருட்டு, தற்போது படக்குழு 27ம் தேதி மதியம் 12:25 மணியளவில் காந்தாரா சேப்டர் 1 படத்தின் முதற்பார்வையை வெளியிடுகிறது. இப்படத்தில் ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, ஊர்வசி ரவ்டேலா, கிஷோர், பிரமோத் ஷெட்டி உட்பட பலரும் நடிக்கின்றனர். காந்தாரா முதற் பாகத்தின் தொடர்ச்சியாகவே, காந்தாரா சேப்டர் 1 தயாராகியுள்ளது. ரூ.125 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படம், 2024ல் திரைக்கு வருகிறது.
ಇದು ಬರಿ ಬೆಳಕಲ್ಲ ,ದರ್ಶನ, Revealing the first look on 27th nov @ 12:25pm @hombalefilms @VKiragandur @ChaluveG pic.twitter.com/HEvj27yeQU
— Rishab Shetty (@shetty_rishab) November 25, 2023
(The above story first appeared on LatestLY on Nov 25, 2023 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

