Tiger 3 on Deepawali 2023: தீபாவளி ரேஸில் இணைந்த சல்மான் கானின் டைகர் 3: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தமிழில் சல்மான் ட்விட்..!
டைகர் உயிரோடு இருக்கும் வரை, அவனை யாராலும் வெல்ல முடியாது! என சல்மான் கான் தமிழ் மொழியில் ட்வீட் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக தமிழில் டைகர் 3 தீபஒளி அன்று களமிறங்குகிறது.
செப்டம்பர் 27, மும்பை (Cinema News): மணீஷ் சர்மா (Director Maneesh Sharma) இயக்கத்தில், யஷ்ராஜ் பிலிம்ஸ் (Yash Raj Films) தயாரிப்பில், நடிகர்கள் சல்மான் கான் (Salman Khan), கத்ரீனா கைப் (Katrina Kaif), ரிதி தோக்ரா, இம்ரான் ஹாஸ்மி, அனுப்பிரியா, ரேவதி உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் டைகர் 3 (Tiger 3 Movie).
ரூ.300 கோடி பொருட்செலவில் தயாராகியுள்ள டைகர் 3 திரைப்படம், உலகளவில் பல்லாயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகிறது. சல்மானின் படத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதால், படம் வெளியான பின்பு ரூ.1000 கோடியை கடந்து வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. Iraq Massive Fire: திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்: தீ விபத்தில் 110 பேர் பலி., 150 பேர் படுகாயம்.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
அதேபோல, 10 நவம்பர் 2023 அன்று இந்தியாவில் தீபஒளித்திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்றைய நாளில் டைகர் 3 திரையரங்கில் வெளியாகிறது. டைகர் 3 திரைப்படம் இந்தியாவின் உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரியின் கதையம்சம் என்பது டிரைலர் காட்சிகளில் இருந்து உறுதியாகிறது. அதிரடி சண்டைகளுக்கு பஞ்சமில்லை என்பதால், திரையரங்கில் ரசிகர்களின் வரவேற்பு பலமாக இருக்கும்.
இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சல்மான் கான் 3 மொழிகளிலும் படத்தின் டிரைலரை வெளியிட்டு, அந்தந்த மொழிகளில் ட்வீட் பதிவு செய்துள்ளார். தமிழ் மொழியில் அவர் பதிவு செய்துள்ள ட்விட்டரில், "டைகர் உயிரோடு இருக்கும் வரை, அவனை யாராலும் வெல்ல முடியாது! #TigerinSeithi #Tiger3 தீபாவளி முதல்" என கூறியுள்ளார்.
டைகர் உயிரோடு இருக்கும் வரை, அவனை யாராலும் வெல்ல முடியாது! #TigerinSeithi #Tiger3 தீபாவளி முதல்.
Tiger uyiroda irukum varai, avanai yaaralum vella mudiyaadhu. #TigerinSeithi #Tiger3 Deepavali mudhal.#KatrinaKaif | #ManeeshSharma | @yrf | #YRF50 | #YRFSpyUniverse pic.twitter.com/opoWQfT65W
— Salman Khan (@BeingSalmanKhan) September 27, 2023
(The above story first appeared on LatestLY on Sep 27, 2023 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

