Iraq Massive Fire: திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்: தீ விபத்தில் 110 பேர் பலி., 150 பேர் படுகாயம்.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
Iraq Wedding Fire 27 Sep 2023 (Photo Credit: Twitter)

செப்டம்பர் 27, பாக்தாத் (World News): ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் (Baghdad, Iraq) நகரில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நினிவேஹ் (Nineveh province) மாகாணம்.

இந்த மாகாணத்தில் உள்ள மோசூல் (Mosul) நகரின், ஹம்டன்யா (Hamdaniya) பகுதியில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு நடந்துள்ளது. அதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று திருமணத்தில் பங்கேற்கவிருந்த குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் திருமண ஏற்பாடு நடந்த இடத்தில் இருந்தனர். திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. Vignesh Shivan - Nayan Babies Birthday: மகன்களின் பிறந்தநாளில் மனமுருகி நெகிழ்ச்சி தகவலை பகிர்ந்த விக்னேஷ் சிவன்; வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்.! 

அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 110 பேர் பலியாகி இருக்கின்றனர். 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பான தகவல் தெரியவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Final Destination திரைப்பட பாணியில் நொடியில் நடந்த பயங்கர விபத்தின் பதைபதைப்பு வீடியோ காட்சிகளில் 06 நொடிகள் கேமிராவில் பதிவாகி வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.