Inga Naan Thaan Kingu: "இங்க நான் தான் கிங்கு" சந்தானத்தின் திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?.. விபரம் இதோ..!
கமல் ஹாசன் சார்பில் இன்று நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அத்துடன் சந்தானத்தின் படத்தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28, சென்னை (Cinema News): சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பரிட்சயமான பல நடிகர்களில், காமெடியில் தனது வாழ்க்கையை தொடங்கி இன்று நட்சத்திர நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர் நடிகர் சந்தானம் (Santhanam). லொள்ளுசபாவில் தொடங்கிய சந்தானத்தின் பயணம், அடுத்தடுத்து வளர்ந்து சிம்புவால் வெள்ளித்திரையில் சாத்தியமானது.
காமெடி நட்சத்திரம் நாயகனாக உருமாற்றம்: அதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து படத்தின் வெற்றிக்காக முக்கிய அங்கமாக இருந்த நடிகர் சந்தானம், சமீபகாலமாகவே தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, ஏ1, டிக்கிலோனா, சபாபதி, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. Dalit Boy Killed by Cops: அம்பேத்கர் பேனர் வைப்பதில் இருதரப்பு மோதல்; காவலர்களின் துப்பாக்கிசூட்டில் தலித் சிறுவன் மரணம்.!
கமல் ஹாசன் சார்பில் வெளியிடப்பட்ட படத்தலைப்பு & முதற்பார்வை: இந்நிலையில், சந்தானம் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கும் படத்தின் அப்டேட் இன்று வெளியாகவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நடிகர் சந்தானத்தின் புதிய படத்திற்கு 'இங்க நான் தான் கிங்கு (Inga Naan Thaan Kingu)' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதற்பார்வையும் வெளியாகி இருக்கிறது.
அன்புத்தம்பி சந்தானத்தின் படம்: படத்தை ஆனந்த் நாராயணன் இயக்கி இருக்கிறார். இமான் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் விரைவில் வெளியீடுக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பில் தனது எக்ஸ் பக்கத்தில் கமல் ஹாசன் பகிர்ந்துள்ள தகவலாவது, "எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.#IngaNaanThaanKingu#GNAnbuchezhian @Sushmitaanbu @gopuramfilms @Gopuram_Cinemas… pic.twitter.com/Jn2629UVP3
— Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2024
(The above story first appeared on LatestLY on Feb 28, 2024 12:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

