Victin Brother of UP Rampur Dalit Boy Shot Dead on 27-Feb-2024 (Photo Credit: @SachinGuptaUP X)

பிப்ரவரி 28, ராம்பூர் (Uttar Pradesh News): உத்திப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டம், மில்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலாய் படா கிராமத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், அம்பேத்கரின் பேனர் ஒன்றை அங்குள்ள சாலையில் வைக்க முற்பட்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பு (Rampur Dalit Boy Died) தெரிவித்த கிராமத்தினர், தங்களின் கிராமத்திற்கு சொந்தமான நிலத்தில் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க கூடாது என கூறி இருக்கின்றனர்.

தலித் சிறுவன் பலி: எதிர்ப்பை மீறி தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்கர் பேனர் வைக்க முயற்சிக்க, அங்கு இருதரப்பு மோதல் உண்டாகி இருக்கிறது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிசூடு நடத்தி இருக்கின்றனர். இந்த துப்பாக்கிசூட்டில் தலித் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Drug Bust in India: கைதி படத்தை மிஞ்சும் உண்மை சம்பவம்.. இந்தியாவில் முதல் முறை.. 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்.. 5 பேர் கைது.! 

Gun Fire (Photo Credit: Pixabay)

மக்கள் போராட்டம்: இதனால் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற மக்கள் ஒன்று திறந்து போராட்டம் செய்து வருகின்றனர். சிறுவனின் உடலை எடுக்கவிடாமல் போராட்டம் தொடருகிறது. இதனால் பதற்றம் கருதி காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் அதிகாரிகள் ஆதேஷ் சௌஹான் மற்றும் ரிஷிபால் ஆகியோர் சேர்ந்து துப்பாக்கிசூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை குவிப்பு: இந்த விஷயம் தொடர்பாக காவல்துறை உயர்மட்ட விசாரணையும் நடந்து வருகிறது. மேலும், துப்பாக்கிசூடு சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. New Married Couple Died: திருமணமான 3 மாதத்தில் மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்; புதுமணப்பெண்ணும் தற்கொலை... சோகத்தில் குடும்பத்தினர்.! 

சிறுவனின் குடும்பத்தினர் வேதனை: மறைந்த சிறுவனின் குடும்பம் நிலம் இல்லாத ஏழை குடும்பம் ஆகும். சிறுவனின் சகோதரர் ரிக்சா ஓட்டி வரும் தொகையில் தான் குடும்பம் நடத்தப்பட்டு வந்துள்ளது. காவல் அதிகாரிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு சிறுவனின் உயிரை பறித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த விஷயம் குறித்து மாவட்ட தலைமை நீதிபதி, ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.