ASTHRAM Official Trailer: ஆக்சனில் அதிரடி காட்டும் ஷியாம்.. மிரட்டும் காட்சிகளுடன் வெளியானது அஸ்திரம் படத்தின் ட்ரைலர்.!
ஷியாம் நாயகனாக நடித்துள்ள அஸ்திரம் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன. சாக்லேட் பாயாக களமிறங்கி அசத்திய ஷியாம், ஹாட்ஸ்டாரில் வெளியான கோலி சோடா தொடரில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது ஆக்சன் நாயகனாக களமிறங்கி இருக்கிறார்.
ஜனவரி 31, கோடம்பாக்கம் (Cinema News): பெஸ்ட் மூவிஸ் தயாரிப்பில், நடிகர்கள் ஷியாம், நிரா, ரஞ்சித் டிஎஸ்எம், வெண்பா, நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி சங்கர், விதேஷ் ஆனந்த் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் அஸ்திரம் தி சீக்கிரட் (ASTHRAM - The Secret). இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கி இருக்கிறார், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைத்து இருக்கிறார். Vijay Sethupathi: "நல்ல முறையில் வரி செலுத்திய குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்க வேண்டும்" - நடிகர் விஜய் சேதுபதி..!
ஆக்சன் காட்சிகளில் ஷியாம்:
பூபதி வேதகிரி எடிட்டிங்கில், முத்தமிழ் வரிகளில் உருவாகியுள்ள இப்படம் ஆக்சன்-திரில்லர் பாணி கொண்டது ஆகும். நடிகர் ஷியாம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம்வந்த நிலையில், தற்போது ஆக்சன் படத்தில் நடித்து இருக்கிறார். முன்னதாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான கோலி சோடா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்.