Kanguva Glimpse: அட்டகாசமான தோற்றத்தில் ஒரேயொரு டயலாக்.. உச்சகட்ட ஆக்ரோஷத்துடன் நலம் விசாரிக்கும் சூர்யாவின் கங்குவா.!

2024ல் கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. ரூ. 350 கோடி செலவில் தயாராகும் திரைப்படம் மாபெரும் தாக்கத்தை இந்திய திரையுலகில் ஏற்படுத்தலாம்.

Surya Kanguva Movie Stillls (Photo Credit: Twitter)

ஜூலை 23, சென்னை (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் & யு.வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிவரும் திரைப்படம் கங்குவா. படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரூ. 350 கோடி பொருட்செலவில் படம் தயாராகிறது.

நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் உட்பட பலரின் நடிப்பில் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் கங்குவா, 2024ல் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. NIA Raid: அதிகாலையிலேயே பல மாவட்டங்களை அதிரவிட்ட தேசிய புலனாய்வு முகமை; திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக24 இடங்களில் அதிரடி சோதனை.!

இப்படத்தின் 2 நிமிட முதற்பார்வை வீடியோ படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கதாநாயகன் சூர்யாவின் வீரத்தை பறைசாற்றும் வகையில் பின்னணி குரல் எழுப்ப, இறுதியில் சூர்யா நலமா என்ற கேள்வியை மட்டும் கேட்கிறார்.

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், பலரும் நடிகர் சூர்யாவுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்றைய நாளில் அவரின் ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்படும் கங்குவா படத்தின் முதற்பார்வை வெளியானது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement