நவம்பர் 25, சென்னை (Cinema News): சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் திரைப்படம் பராசக்தி (Parasakthi). இப்படத்தில் ரவி மோகன், தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் ரவிமோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள பராசக்தி திரைப்படம் 1960 காலகட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தினை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
50 நாட்களில் திரைக்கு வரும் பராசக்தி:
மேலும் இப்படம் இந்தித்திணிப்பை மையமாகக் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் அதர்வா, ஸ்ரீலீலா, நடிகர் சிவகார்த்திகேயன், ரவிமோகன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். படம் இன்னும் 50 நாட்களை திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டப்பிங் பணிகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. White Salna: இடியாப்பத்திற்கு ஏற்ற வெள்ளை சால்னா.. வீட்டிலேயே சட்டென செய்து அசத்துங்கள்.!
பராசக்தி படத்தின் புதிய போஸ்டர் (Parasakthi Movie Poster):
5️⃣0️⃣ days to go before the #Parasakthi storm takes over theatres
The Countdown Begins⏳#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14… pic.twitter.com/zuit13achN
— DawnPictures (@DawnPicturesOff) November 25, 2025