Surya 44 Update: புதிய லுக்குடன் சூர்யா.. தொடங்கியது சூர்யா 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பு..!
திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் சூர்யாவின் 44 வது திரைப்படத்தின் பட்டப்படிப்பு தொடங்கியுள்ளது. அதன் சாட்சியாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
ஜூன் 03, சென்னை (Cinema News): கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்களின் முன்மாதிரியாக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா (Actor Surya), சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா (Kanguva) திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகும். இப்படத்திற்கு பின் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்துள்ளவர், தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூர்யா, பூஜா ஹெட்ஜ், கருணாகரன், ஜெயராம் உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். Youth Dies by Heart Attack: மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபடி மாரடைப்பு மரணம்; இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்.!
கார்த்திக் சுப்புராஜ் படம்: 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை உறுதி செய்யும் வகையில், படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில், நடிகர் சூர்யா தனது பயண பையுடன் கடலை பார்த்துவிட்டு, பின் கேமிராவை நோக்கி திரும்புகிறார். அவரின் புதிய வகையிலான முகத்தோற்றம், ஜெகமே தந்திரம் திரைப்படத்தின் தனுஷ் தோற்றத்தை ஒத்து காணப்படுகிறது. இதனால் கார்த்திக் சுப்புராஜ் அடுத்த மாஸ்டர் கிளாஸ் படத்திற்கு தயாராகியுள்ளதாக அவரின் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். Kadhalikka Neramillai Glimpse Out: "என்னை இழு இழு இழுவென இழுக்குதடி.." ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!
அடுத்தடுத்த வெற்றியால் குவியும் படங்கள்: தமிழில் பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, இறைவி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உட்பட பல படங்களை இயக்கி வழங்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், மிகப்பிரபலமான இயக்குனர் ஆவார். சஸ்பென்ஸ் வகையில் கதை சொல்லி பார்வையாளர்களை கவர்ந்த கார்த்திக், தனது அட்டகாசமான படைப்புக்களை அடுத்தடுத்து வழங்கி வருகிறார். ஜிகர்தண்டா படத்தின் மிகப்பெரிய வெற்றி, அவரை ரஜினியை இயக்கும் வாய்ப்பை வழங்கியது. தற்போது ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுல் எக்ஸ் ஆகிய படங்களின் வெற்றி, கார்த்திக்கை சூர்யாவுடன் இணைத்து இருக்கிறது.
Lights! Camera!! Action!!!#LoveLaughterWar #AKarthikSubbarajPadam Shoot in progress… #Suriya44@karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art @JaikaStunts @PraveenRaja_Off #Jayaram #Karunakaran @2D_ENTPVTLTD… pic.twitter.com/CpNtWY0KwN
— Suriya Sivakumar () June 2, 2024
(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

