Youth Dies by Heart Attack: மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபடி மாரடைப்பு மரணம்; இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்.!
கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர், திடீரென மயங்கி சரிந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர், மாரடைப்பால் பலியானது உறுதி செய்யப்பட்டது.
ஜூன் 03, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மீரா ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தனியார் மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அச்சமயம், இளைஞர் ஒருவர் பேட்டிங் செய்துகொண்டு (Youth Died While Playing Cricket) இருந்த நிலையில், திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிற வீரர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 2 People Drowned in the Sea: செல்பி எடுத்தபோது சோகம்.. ராட்சத அலையில் சிக்கி 2 பெண்கள் பலி., இன்ப சுற்றுலாவில் பரிதாபம்.!
மாரடைப்பால் பரிதாப பலி: மருத்துவமனையில் இளைஞரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காஷிகோன் காவல் துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியானது குறித்த காட்சி வைரலாகி வருகிறது. உயிரிழந்த இளைஞரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்:
मुंबई के मीरा रोड में क्रिकेट खेलते समय एक युवक की मौत की घटना सामने आई है. एक मैदान में बॉक्स क्रिकेट खेलते समय युवक को दिल का दौरा पड़ा और वह गिर गया. पूरी घटना कैमरे में कैद हो गयी. काशीगांव पुलिस घटना की जांच कर रही है.#Mumbai #MiraRod #Maharashtra #HeartAttack #Cricket… pic.twitter.com/FjjDGxBPTv
— ABP News () June 3, 2024
(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

