Surya 44 Update: நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்; சூர்யாவின் 44வது படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!
கங்குவா திரைப்படத்திற்கு பின்னர் சூர்யாவின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க புதிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
மார்ச் 29, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் பீட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை இயக்கி வழங்கியவர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj). இவரின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பல திருப்பு முனையுடன், எதிர்பாராத புல்லரிப்பு காட்சிகளை கொண்டிருக்கும் என்பதால் நல்ல வரவேற்பை பெற்றது.
வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய பேட்ட திரைப்படத்திற்கு பின்னர், தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டின் இறுதியில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா ஆகியோருடன் சேர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கி வழங்கி ரசிகர்களின் ஆதரவை பெற்றார். PM Modi's Unique Jacket: பிரதமர் மோடி அணியும் மேல் ஜாக்கெட்-க்கு இப்படி ஒரு தனித்துவமா?.. அவரே தெரிவித்த ஆச்சரிய தகவல்.!
சூர்யாவின் 44 வது படம்: இவர் அடுத்தபடியாக எந்த நடிகருடன் இணையாகிப்போறார்? என்று தமிழ் திரை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவுடன் (Surya 44) இணைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை எனினும், இத்தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்தில் காதல், நகைச்சுவை, போர் முக்கிய கருவாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
கங்குவாவுக்கு பின் அடுத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படம்: 2டி என்டர்டைன்மெண்ட், ஸ்டோன் பென்ச் தயாரித்து வழங்கும் சூர்யாவின் 44 வது திரைப்படத்தின் பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும். நடிகர் சூர்யாவை பொறுத்தமட்டில், அவரின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா (Kanguva) திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகவுள்ள கங்குவா படத்தில் சூர்யா 6 விதமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
Happy to be joining forces with the mass entertainer @karthiksubbaraj for #Suriya44🔥
Get ready for an all-out #LoveLaughterWar ❤️🔥#AKarthikSubbarajPadam 📽️@Suriya_Offl @rajsekarpandian @kaarthekeyens @stonebenchers pic.twitter.com/HYbLiMzsaa
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 28, 2024
(The above story first appeared on LatestLY on Mar 29, 2024 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

