மார்ச் 29, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ், தொடர்ந்து இந்தியர்களுடன் தனது அறிமுகத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பும் அளிக்கப்படுகிறது. பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரையும் ஆற்றி, இந்திய இளைஞர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தலை வழங்கி வருகிறார்.
மறுசுழற்சி நமக்கு பழகிப்போன ஒன்று: இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி - பில் கேட்ஸ் (PM Narendra Modi Bill Gates Discussion) ஆகியோர் நேரில் சந்தித்து தொழில்நுட்பம், ஆரோக்கியம், காலநிலை உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதித்து இருந்தனர். இதுதொடர்பான காணொளி இன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, மறுசுழற்சி தொடர்பான விவாதத்தில் தனது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். Jammu Taxi Fall into George: 10 பேருக்கு எமனாய் அமைந்த பயணம்; 300 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து பரிதாப பலி.. ஜம்முவில் சோகம்.!
மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களில் ஜாக்கெட்: அந்த காணொளியில் நரேந்திர பிரதமர் மோடி பேசுகையில், "மறுசுழற்சி மற்றும் மீண்டும் பொருளை பயன்படுத்துதல் என்பது நமது இயல்பானது. நமது கலாச்சாரம் & பாரம்பரியங்களில் ஒன்றியது. இதற்கு உத்தரமாக நான் அணிந்திருக்கும் ஜாக்கெட்டை (மேல் சட்டை) கூறலாம். இந்த ஜாக்கெட் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களில் இருந்து தயார் செய்யப்பட்டது ஆகும். இவ்வாறான பொருட்களின் தனித்தன்மை என்பது அதன் தோற்றத்தில் இருக்கிறது. மறுசுழற்சி துணியை உருவாக்குவதற்கு, தையல்காரர் பயன்படுத்தும் துணி மற்றும் ஆடையில், நிராகரிப்பு செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரெப்ரோஸின் 32-40% இருக்கிறது. இவ்வாறான மறுசுழற்சி பொருட்கள் அதனால் ஏற்படும் இயற்கைக்கு எதிரான தீங்குகளை கட்டுப்படுத்த உதவுகிறது, மனிதர்களுக்கும் பயன்படுகிறது" என தெரிவித்தார்.
PM's unique jacket. pic.twitter.com/XOFfsvOEUJ
— Piyush Goyal (मोदी का परिवार) (@PiyushGoyal) March 29, 2024