நவம்பர் 17, மும்பை (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா (Kanguva). கேஇ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் உருவாகியுள்ளது. ஐமேக்ஸ் தரத்தில், ரூ.300 கோடி செலவில் உருவான கங்குவா, நவம்பர் 14, 2024 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்கள்:
இப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படத்தின் வெளியீடுக்கு முன்பு படம் நெருப்பாக இருக்கும், பாண் இந்திய அளவில் வாயை பிளந்து பார்ப்பார்கள் என சூர்யாவும், ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், ஒளிப்பதிவு மிகப்பெரிய வெற்றியை அடையும் என வெற்றி பழனிசாமியும் பேசி இருந்தனர். இதனிடையே, படம் வெளியானதும் கலவையான விமர்சனங்கள் வெளியாகி படக்குழுவிக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. Viduthalai 2: விடுதலை படத்தின் 'தினம் தினமும்' பாடல் வெளியானது; லிங்க் உள்ளே.. மெய்சிலிர்க்க வைக்கும் இளையராஜாவின் குரல்.!
வசைபாடலை எதிர்கொண்ட படம்:
படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் இசை ரீதியாக பெரும் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதிக இரைச்சல் சத்தத்தால் பார்த்தவர்களுக்கு தலைவலி உண்டாக, அவர்கள் திரைப்படம் பார்க்க வந்து தலைவலி ஏற்பட்ட கடுப்பில் மொத்த படத்தையும், தயாரிப்புக்குழுவையும் கடுமையாக வசைபாடிச் சென்றனர். இந்நிலையில், நடிகை ஜோதிகா, "கங்குவா திரைப்படம் குறித்து திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டுள்ளது. முதல் 30 நிமிடங்கள் மட்டுமே படத்தில் சத்தம் அதிகம் இருந்தது, பின்னர் படம் நன்றாகவே உள்ளது. படத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள், சினிமாவை உயர்த்த ஏதும் செய்யவில்லை" என தெரிவித்துள்ளார்.
ஜோதிகா (Jyothika Condemn on Kanguva Negative Review) கண்டனம்:
இதுகுறித்து ஜோதிகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்த பதிவை நான் சினிமா ரசிகையாக எழுதுகிறேன். சூர்யாவைப்பற்றி பெறுமையாக இருக்கிறது. அவர் சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறார். கங்குவா படத்தில் முதல் அரைமணிநேரம் ஒலி அதிகம் தான். பெரும்பாலான இந்தியப்படத்தில் இருக்கும் குறைப்பதில் இது ஒரு பகுதி. எனினும், ஒட்டுமொத்த படத்தையும் விமர்சிக்கின்றனர். தமிழ் சினிமா இதுவரை கண்டிடாத நுணுக்கமான பணிகள் இவை. சில ஊடகங்கள், நபர்களின் எதிர்மறை விமர்சனம் ஆச்சரியத்தை தருகிறது. மிகப்பெரிய அளவிலான பட்ஜெட் படங்கள், பெண்களை பின்தொடருதல், இரட்டை அர்த்த வசனங்களுக்கு எழாத எதிர்ப்பு இங்கு எழுந்துள்ளது. இப்படம் சிறந்த ஆக்சன் காட்சிகளை கொண்டு இருக்கிறது. சில காட்சிகளை கொண்டாட வேண்டியவர்கள், ஒட்டுமொத்தமாக விமர்சிக்கிறார்கள். முதல் நாளே கங்குவாவுக்கு எதிர்மறை கருத்துக்கள் வருத்தம் தருகிறது. எதிர்மறை கருத்து கூறியவர்கள், சினிமாவை உயர்த்த எதுவும் செய்யவில்லை" என தெரிவித்தார்.
நடிகை மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா பதிவு செய்த கண்டன அறிக்கை:
View this post on Instagram