Kanguva Fire Song: கங்குவா படத்தின் 'ஃபயர் பாடல்' அப்டேட்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

பல ஆண்டுகளாக திரையுலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் ஒன்று இன்னும் 4 நாட்களில் வெளியாகவுள்ளது.

Kanguva Fire Song: கங்குவா படத்தின் 'ஃபயர் பாடல்' அப்டேட்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Kanguva Poster (Photo Credit: @StudioGreen2 X)

ஜூலை 19, சென்னை (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கே.எஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா (Kanguva). கேஇ ஞானவேல் ராஜா தயாரிப்பில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் உருவாகியுள்ளது. Shankar Interview: "என்னுடைய பையன் வெற்றியடைந்தால் எப்படி பெருமையாக இருக்குமோ, அந்தளவுக்கு பெருமையாக இருக்கிறது" - சங்கர் பேட்டி..! 

வரவேற்பை பெற்ற கங்குவா டீசர்:

ஐமேக்ஸ் தரத்தில், ரூ.300 கோடி செலவில் உருவாகி வரும் கங்குவா படத்தில், நடிகர் சூர்யா பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அயன் திரைப்படத்திற்கு பின்னர் கங்குவா படத்தில் சூர்யா பல தோற்றங்களில் நடிக்கிறார். அதேபோல, படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கும்பொருட்டு, படத்தின் டீசரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

ஜூலை 23ல் பாடல் வெளியாகிறது:

அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்ப முறையில் வெளியாகும் இப்படம், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் வெளியாகிறது. சர்வதேச அளவில் கங்குவா திரைப்படம் தான் தமிழ் மொழிப்படங்களில் வெளியீடுக்கு முன்பே பலகோடி வருமானத்தை பெற்றதும் ஆகும். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ஒன்று வரும் 23ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு:

கங்குவா டீசரை கண்டு மகிழுங்கள்:

(The above story first appeared on LatestLY on Jul 19, 2024 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).